Close
டிசம்பர் 4, 2024 7:09 மணி

டேக்வாண்டோ போட்டியில் முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தேர்வான மதுரை மாணவி..!

டேக்வாண்டோ போட்டியில் சாதனை படைத்த மாணவிகளுடன் பள்ளி நிர்வாகிகள்

டேக்வாண்டோ போட்டியில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற உசிலம்பட்டி பள்ளி மாணவிகள்.

உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டையில் உள்ள ஜெயராஜ் நாடார் மேல்நிலைப் பள்ளியில்,
புதிய விளையாட்டுப் போட்டிகள் பிரிவில் டேக்வேண்டோ போட்டியில் உசிலம்பட்டி ஆர்.சி சிறுமலர் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் 12ம் வகுப்பு மாணவி தனுஸ்ரீ முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கமும், சான்றிதழும் பெற்று மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கு தகுதி பெற்றார். மேலும் 10ம் வகுப்பு மாணவி ப்ரக்ரித்தி 8ம் வகுப்பு மாணவி அர்ஜினி ஆகிய இரு மாணவிகள் இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளி பதக்கமும், சான்றிதழ்களும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளர் ரோஜாமணி, தலைமை ஆசிரியர் மெர்சி உடற்கல்வி ஆயிசிரியர் செல்சியா ஆகியோர்கள் பாராட்டினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top