Close
டிசம்பர் 4, 2024 8:19 காலை

மதுரையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உடனுக்குடன் தீர்வு..!

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்கள் அளித்த பொதுமக்கள்

மதுரை:

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

பொதுமக்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாகப் பெற்று உடனடி தீர்வு காணும் வகையில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த முகாமில், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கி வருகின்றனர். நேற்று நடந்த கூட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 650 மனுக்களை வழங்கினர்.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து தகுதியான மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top