Close
டிசம்பர் 4, 2024 8:16 காலை

நாமக்கல் புதிய பைபாஸ் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் : ரயில்வே துறை தலைவரிடம் ராஜேஷ்குமார் எம்.பி. கோரிக்கை..!

டில்லியில் ரயில்வே வாரியத்தலைவர் சதீஷ்குமாரை, ராஜ்யசபா எம்.பி. நாமக்கல் ராஜேஷ்குமார் சந்தித்து பேசினார்.

நாமக்கல் :

நாமக்கல் புதிய பைபாஸ் ரோட்டில், ரயில்வே மேம்பாலம் அமைக்க விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என, மத்திய ரயில்வே வாரியத் தலைவரிடம், ராஜேஷ்குமார் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டில்லியில், மத்திய ரயில்வே வாரியத் தலைவர் சதீஷ்குமாரை, ராஜ்யசபா எம்.பியும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான ராஜேஷ்குமார் நேரில் சந்தித்து பேசினார். அப்போது கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அதில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் நகருக்கு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, நாமக்கல் சேலம் ரோட்டில் இருந்து, சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலை வரை, ரூ. 194 கோடி மதிப்படில் புதிய பைபாஸ் ரோடு அமைக்க தமிழக முதல்வர் அனுமதி அளித்துள்ளார். இதையொட்டி புதிய பைபாஸ் ரோடு அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

4 கட்டங்களாக நடைபெறும் இந்த பணியில், முதல் 3 கட்டங்களுக்கு, திருச்சி மெயின் ரோடு வரை பைபாஸ் ரோடு அமைக்கும் பணி விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளது. இப்பணியின் 2வது கட்டத்தில் வேட்டாம்பாடி அருகே சேலம்-கரூர் ரயில் பாதையை கடக்க ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு ரயில்வே துறையின் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இந்த அனுமதியை விரைந்து வழங்கி, கட்டுமானப் பணிகளை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி முடிவடைந்தால், புதிய பைபாஸ் ரோடு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என அவர் கூறியுள்ளார். மேம்பால கட்டுமானப்பணிகளுக்கு விரைவில் அனுமதி வழங்க, துறைத்தலவர் சம்மதம் தெரிவித்ததாக, ராஜேஷ்குமார் எம்.பி. கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top