அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நினைத்தாலே முக்தி தரும்’ திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வ மான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 1ஆம் தேதி துவங்கியது.
தொடர்ந்து பிடாரி அம்மன் உற்சவம், நேற்று இரவு விநாயகர் சண்டிகேஸ்வரர் உற்சவங்கள் நடைபெற்றது.
இன்று அதிகாலை விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், உண்ணாமுலை அம்மன் சமேத அருணாச்சலேஸ்வரர் ,பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட உற்சவர்கள் கோயில் தங்க கொடிமரம் எதிரே சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
இதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் கோயிலில் மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்கக்கொடி மரத்தில் கோவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க , அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷத்துடன் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தீபத் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரன், முக்கிய பிரமுகர்கள், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், ,ஆயிரக்கணக்கான பக்தர்கள் ,உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாட்டினை அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் ஜோதி, மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், அறங்காவலர்கள் ராஜாராம், பெருமாள், கோமதி குணசேகரன், திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
அண்ணாமலையார் கோயிலில் இந்த வருடம் 10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவில் எந்தெந்த நாளில் என்னென்ன திருவிழா நடக்கிறது என்ற விவரம்:
- 4,டிசம்பர் 2024 புதன் , 1 திருவிழா
- மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் காலை கொடியேற்றம் பஞ்சமூர்த்திகள் வெள்ளி விமானங்கள்.
- இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி அதிகார நந்தி,ஹம்ச வாகனம்.
- 5,டிசம்பர் 2024 வியாழன் , 2 திருவிழா
- காலை விநாயகர், சந்திரசேகரர் தங்க சூர்ய பிரபை வாகனம்.
- இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி இந்திர விமானம்.
- 6 டிசம்பர் 2024 வெள்ளி , 3 திருவிழா
- காலை விநாயகர், சந்திரசேகரர் பூத வாகனம். இரவு பஞ்சமூர்த்திகள் சிம்ம வாகனம் வெள்ளி அன்ன வாகனம்.
- 7,டிசம்பர் 2024 சனி, 4 திருவிழா
- காலை விநாயகர், சந்திரசேகரர் நாக வாகனம். இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி காமதேனு, கற்பக விருட்ச வாகனம்.
- 8,டிசம்பர் 2024 ஞாயிறு, 5 திருவிழா
- காலை விநாயகர், சந்திரசேகரர் கண்ணாடி ரிஷப வாகனம். இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி பெரிய ரிஷப வாகனம்.
- 9,டிசம்பர் 2024 திங்கள் , 6 திருவிழா
- காலை விநாயகர், சந்திரசேகரர் வெள்ளி யானை வாகனம் 63 நாயன்மார்கள் வீதி உலா. இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரதம், வெள்ளி விமானங்கள்.
- 10,டிசம்பர் 2024 செவ்வாய் 7 திருவிழா
- காலை முதல் லக்னம் விநாயகர் தேர் வடம் பிடித்தல் பஞ்சமூர்த்திகள் மகாராதங்கள் தேரோட்டம்
- 11,டிசம்பர் 2024 புதன் 8 திருவிழா
- காலை விநாயகர், சந்திரசேகரர் குதிரை வாகனம்.
- மாலை 4.30 மணி பிச்சாண்டவர் உற்சவம் இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனம்
- 12,டிசம்பர் 2024 வியாழன் 9 திருவிழா
- காலை விநாயகர், சந்திரசேகரர் புருஷ முனி வாகனம். இரவு பஞ்சமூர்த்திகள் கைலாச வாகனம், காமதேனு வாகனம்.
- 13,டிசம்பர் 2024 வெள்ளி 10 திருவிழா
- அதிகாலை 4 மணி , பரணி தீபம், மாலை 6 மணி மலை உச்சியில் மகா தீபம் (கார்த்திகை தீபம்)
- இரவு பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனம்.
- 14,டிசம்பர் 2024 சனிக்கிழமை இரவு 9 மணி ஐயங்குளத்தில் ஸ்ரீ சந்திரசேகரர் தெப்பல் உற்சவம்.
- 15,டிசம்பர் 2024 ஞாயிறு அதிகாலை அருள்மிகு உண்ணாமூலை உடனுறை ஸ்ரீ அண்ணாமலையார் கிரி பிரதக்ஷணம்.
- இரவு 9 மணி I ஐயங்குளத்தில் அருள்மிகு பராசக்தி அம்மன் தெப்பல்உற்சவம்.
- 16,டிசம்பர் 2024 திங்கள் இரவு 9 மணி ஐயங்குளத்தில் அருள்மிகு சுப்பிரமணியர் தெப்பல்உற்சவம்.
- 17,டிசம்பர் 2024 செவ்வாய் இரவு அருள்மிகு சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனம்.