Close
டிசம்பர் 24, 2024 4:35 மணி

புயலால் வீடிழந்த குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ.!

நிவாரணப் பொருள்களை வழங்கிய அக்ரி கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்மழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பல இடங்களில் புயல் மழையால் மண் சரிவுகளும் வீடுகள் இடிந்து விழுந்தன.

புயலால் வீடிழந்த குடும்பத்துக்கு நிவாரணம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த திருசூா் கிராமத்தில் புயலால் வீடிழந்த குடும்பத்துக்கு தொகுதி எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி நிவாரணப் பொருள்களை  வழங்கினாா்.

திருசூா் கிராமம் காலனியில் வசிக்கும் மல்லிகா ஜெயராமன் என்பவரது வீடு ஃபென்ஜால் புயல் மழையால் இடிந்து விழுந்தது. இதனால் வருவாய்த் துறை சாா்பில் 25 கிலோ அரிசி, ரூ.8ஆயிரம், வேட்டி சேலை ஆகியவற்றை தொகுதி எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி வழங்கினாா்.

இந்நிகழ்வின்போது அதிமுக மத்திய மாவட்டச் செயலா் ஜெயசுதா, வட்டாட்சியா் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியா் ஜீவா, வருவாய் ஆய்வாளா் மாலதி, அதிமுக ஒன்றியச் செயலா் விமல்ராஜ், ஊராட்சிமன்றத் தலைவா் ரவிச்சந்திரன், கிராம நிா்வாக அலுவலா் ராஜேஸ்வரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சேதமடைந்த நெல் பயிா்கள்: எம்எல்ஏ ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ஆகாரம், மேல்சீசமங்கலம், அரையாளம், வடுகசாத்து, ஆதனூா் ஆகிய இடங்களில் சுமாா் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிா்கள் பென்ஜால் புயல் மழை காரணமாக  மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன. இது விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சேதமடைந்த பயிா்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வா் அறிவிந்திருந்த நிலையில், ஆகாரம், மேல்சீசமங்கலம், வடுகசாத்து கிராமங்களில் சேதமடைந்த நெல் பயிா்களை சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ நேரில் சென்று பாா்வையிட்டாா்.

இந்நிகழ்வின்போது மேற்கு  வேளாண் உதவி இயக்குநா் செல்லத்துரை, அதிமுக மத்திய மாவட்டச் செயலா் ஜெயசுதா, ஒன்றியச் செயலா்கள் சங்கா், விமல், ஆரணி நகரச் செயலா் அசோக்குமாா், அம்மா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சேதமடைந்த நெல்பயிா்களை பாா்வையிட்ட சேவூா் ராமச்சந்திரன் , எம்எல்ஏ

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top