Close
டிசம்பர் 12, 2024 6:40 மணி

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய செங்கம் எம்எல்ஏ

பொதுமக்களுக்கு நிவாரண தொகுப்பினை வழங்கிய கிரி எம் எல் ஏ

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்மழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பல இடங்களில் புயல் மழையால் ஏராளமான பொதுமக்கள் பாதிப்படைந்தனர்

இந்நிலையில் செங்கம் தொகுதியில் உள்ள தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள ராயண்டபுரம் கிராமத்தில் புயலினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான அரிசி, காய்கறிகள், வேஷ்டி சேலைகள், போர்வைகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பினை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி வழங்கினார்.
தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள எடத்துனூர், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் லூர்து நகர் இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கும் நிவாரண தொகுப்பினை எம்எல்ஏ வழங்கினார்.

இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் ரமேஷ், செந்தில்குமார், மாவட்ட கவுன்சிலர் சத்யா, மாவட்ட துணை அமைப்பாளர்கள், நகர செயலாளர் சுப்பிரமணி, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

செங்கம் அருகே கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாமினை சட்டமன்ற உறுப்பினர் கிரி துவக்கி வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கட்ட மடுகு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர் சிலம்பரசன் மற்றும் மருத்துவ அலுவலர் சுகதேவ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இம்முகாம் இருக்கு செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் மக்களை தேடி மருத்துவ மூலம் பயன்பெறும் நோயாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட தொகுப்பினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் மனோகரன், செந்தில்குமார், நகர செயலாளர் அன்பழகன் ,ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top