தொடர் மழையால் ஸ்ரீபெரும்புதூர் – கோடம்பாக்கம் சாலையில் கோவூர் பகுதியில் ஏற்பட்ட பள்ளங்களை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
பெஞ்ஜால் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஸ்ரீபெரும்புதூர் கோடம்பாக்கம் சாலையில், குன்றத்தூர் மற்றும் கோவூர் ஆகிய பகுதிகளில் சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டதால் இச்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என கோரிக்கையும் வைத்தனர். இந்த நிலையில், கனமழை காரணமாக ஸ்ரீபெரும்புதூர் கோடம்பாக்கம் சாலையில் கோவூர் பகுதியில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.