Close
டிசம்பர் 12, 2024 6:44 காலை

உலக மண் தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாற்றம் அமைப்பின் சார்பில் னெ்னை மெரினா கடற்கரையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

டிசம்பர் 5 உலக மண் தினத்தையொட்டி திருச்சி மாற்றம் அமைப்பின் சார்பில் சென்னை மெரினாவில் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் மாணவர்கள் மத்தியில்  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அப்போது நமது இயற்கை வளத்தில் மண் வளம் மிக முக்கியமானது அதை பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தி மாசுபடுத்தாமல் இருக்க வேண்டும், கடற்கரையில் பிளாஸ்டிக் பைகள் தவிர்த்து கடல் வளத்தையும் கடலில் உள்ள உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் வளம் அதில் வாழும் உயிரினங்கள் மோசமாக பாதிக்கபடுகிறது என்பதை அனைவரும் உணர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை கடற்கரையில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என எடுத்துக்கூறப்பட்டது.

மேலும் இப்படி கடற்கரை பகுதிகளை நாம் பாதுகாக்க தவறியதன் விரைவாக தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம் ,கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெரும் மழை பொழிந்து பாதிப்பை ஏற்படுத்தியது .இது போன்ற இயற்கை பாதிப்புகள் உருவாக நாமும் ஒரு காரணம் என்பதை உணர்ந்து அனைவரும் சுற்றுச்சூழல் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியது நமது அனைவரின் கடமை என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்கள் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்வில் மாற்றம் அமைப்பின் சார்பில் மக்கும் வகையிலான பைகள் வழங்கப்பட்டது  இந்நிகழ்வில் வழக்கறிஞர் ஸ்டான்லி, வழக்கறிஞர் அப்துல் ரசாக், மாணவர் மன்றத்தை சேர்ந்த ஜீவா, அலெக்ஸாண்டர், ஜோஷ்வா, பிரபு மார்க்ஸ், இஸ்லாம் ,பாண்டியன் ,இக்பால் தமிழ் வேந்தன் மற்றும் மாற்றம் அமைப்பின் நிறுவனரும் தேசிய மாநில விருது பெற்ற குறும்பட நடிகரும் இயக்குனருமான ஆர்.ஏ.தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top