Close
டிசம்பர் 12, 2024 6:27 காலை

சென்னை பல்லாவரத்தில் குடிநீரில் கலந்த சாக்கடையால் 3 பேர் உயிரிழப்பு

3 பேர் உயிரிழந்த பல்லாவரம் பகுதியில் தூய்மை பணிகள் நடைபெற்றது.

சென்னை பல்லாவரத்தில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்ததால் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சென்னை தாம்பரம் மாநகராட்சியை சேர்ந்தது பல்லாவரம். இங்குள்ள மலைமேடு பகுதியில் நேற்று இரவு திரிவேதி, இன்று வரலட்சுமி, மோகன்ராஜ் என அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்கள் திடீரென வாந்தி எடுத்து உள்ளனர். மேலும் அவர்களுக்கு வயிற்று போக்கும் ஏற்பட்டு உள்ளது. இதற்காக அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது தான் சிகிச்சை பலன் இன்றி அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இன்னும் 30க்கும் மேற்பட்டவர்கள் குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டதற்கு அவர்கள் பருகிய குடிநீரில் சாக்கடை நீர் கலந்ததே காரணம் என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் மாநகராட்சி பணியாளர்கள் பிளீச்சிங் பவுடர் தூவி தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் இன்று மதியம் பாதிக்கப்பட்டவர்களை பார்ப்பதற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் உயிரிழந்தவர்கள் சாப்பிட்ட மீன்களே காரணம் என கூறினார். அதே நேரத்தில் அமைச்சர் மா சுப்பிரமணியன் உயிரிழந்த பகுதியில் உள்ள மக்கள் பருகிய குடிநீர் பரிசோதனைக்காக கிங்ஸ் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.

குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top