Close
டிசம்பர் 12, 2024 2:49 மணி

ஓய்வு பெற்ற பத்திரிகையாளர் கோவிந்தசாமி மறைவிற்கு அமைச்சர் நேரு இரங்கல்

மறைந்த பத்திரிகையாளர் கோவிந்தசாமி.

ஓய்வு பெற்ற பத்திரிகையாளர் கோவிந்தசாமி மறைவிற்கு அமைச்சர் நேரு இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார்.

இது தொடர்பாக  திமுக முதன்மை செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தினமலர் பத்திரிகையில் நீண்ட காலம் செய்தியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற பத்திரிகையாளர் எஸ்எம் கோவிந்தசாமி உடல் நலக்குறைவால் நேற்று இரவு இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

திருச்சி தினமலர் பத்திரிகையில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமை செய்தியாளராக நேர்மையுடன் பணியாற்றிய கோவிந்தசாமி அவர்களை நான் நன்கு அறிவேன்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் திருச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்தால் தினமலர் கோவிந்தசாமி வந்து வி்ட்டாரா ? என கேட்கும் அளவிற்கு அவருடன் நட்பு பாராட்டியவர். அவர் எழுதிய பல கட்டுரைகளை நான் படித்து இருக்கிறேன்.

செய்தியாளர்கள் கூட்டத்தின்போது அவர் பல ஆக்கபூர்வமான கேள்விகளை கேட்டு அவற்றை அனைவரும் கவரும் வகையில் கோர்வையாகவும் தெளிவாகவும் எழுதி உள்ளதை நான் பல முறை பாரட்டி இருக்கிறேன்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தினமலர் பத்திரிகை நிர்வாகத்திற்கும், சக பத்திரிகையாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top