Close
டிசம்பர் 12, 2024 8:51 காலை

விளையாட்டு வீரர்களுக்கு சாம்பியன் கிட்ஸ் தொகுப்புகள்: அமைச்சர் மதிவேந்தன் வழங்கல்..!

நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில், விளையாட்டு வீரர்கள், வீராங்கணைகளுக்கு சாம்பியன் கிட்ஸ் தொகுப்புகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். அருகில் ராஜ்யசபா எம்.பி., ராஜேஷ்குமார், கலெக்டர் உமா, எஸ்.பி. ராஜேஷ்கண்ணன், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர்.

நாமக்கல் :

நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில், விளையாட்டு வீரர்களுக்கு சாம்பியன்ஸ் கிட் தொகுப்புகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

நாமக்கல் கலெக்டர் ஆபீசில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், நாமக்கல் ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் கிட் தொகுப்புகள் வழங்கும் விழா நடைபெற்றது.

கலெக்டர் உமா தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜேஸ்குமார், எம்.பி., எம்எல்ஏ ராமலிங்கம், மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் விழாவில் கலந்துகொண்டு, நாமக்கல் ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டலில் தங்கிப்படிக்கும் 95 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் கிட் தொகுப்புகளை வழங்கி பேசியதாவது:

தமிழ்நாடு துணை முதலமைச்சர் கடந்த 11.11.2024 அன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல்களில் தங்கிப் படிக்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் கிட் என்ற விளையாட்டு வீரர்கள் அத்தியாவசியமாக பயன்படுத்தக் கூடிய பொருட்களின் தொகுப்பினை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.

அதனைத்தொடர்ந்து, இன்று நாமக்கல் ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டலில் தங்கிப் படித்து வரும் மாணவிகளில், கால்பந்து விளையாட்டில் 33 மாணவியர், கபடி விளையாட்டில் 25 மாணவியர், செல்வம் விளையாட்டு விடுதியில் வாள்சண்டை விளையாட்டில் 17 மாணவியர், தடகளம் விளையாட்டில் 20 மாணவியர் என மொத்தம் 95 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு நவீன கைகடிகாரம், பேக், முதலுதவி ஐஸ் பேக், கைக்குட்டை, துண்டு, வாட்டர் பாட்டில், தொப்பி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய சாம்பியன்ஸ் கிட் வழங்கப்படுகிறது என கூறினார்.

தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருச்செங்கோடு வருவாய் கோட்டம் சார்பில் தயாரிக்கப்பட்ட உயிர்க் கவசம் எனும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வீடியோ படத்தை அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்டார். நிகழ்ச்சியில் நாமக்கல் மாகநகர மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, சிஇஓ மகேஸ்வரி, மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top