நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி மற்றம் கெட்டிமேடு பகுதியில் வருகிற 10ம் தேதி மின்சார நிறுத்தம்அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சீரான மின் விநியோகம் வழங்குவதற்காக, ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும், ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் வருகிற 10ம் தேதி செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும்.
இதனால் எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டான்செட்டி, வரதராஜபுரம், சிங்களங்கோம்பை, காவக்காரம்பட்டி, பவித்திரம் புதூர், செல்லிபாளையம், கஸ்தூரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 10ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.
கெட்டிமேடு:
நாமக்கல் மாவட்டம் கெட்டிமேடு துணை மின் நிலையப் பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வருகிற 10ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும்.
இதனால் கோனங்கிப்பட்டி, பொன்னேரி, காளிசெட்டிப்பட்டி, புதுக்கோட்டை, அ,.பாலப்பட்டி, ஈச்சவாரி, பொம்மசமுத்திரம், கனவாய்ப்பட்டி, கெட்டிமேடு, பொட்டிரெட்டிப்பட்டி, பீமநாய்க்கனூர், பெருமாப்பட்டி, தூசூர், கொடிக்கால் புதூர், ரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 10ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.