உத்தரமேரூர் ஏரியிலிருந்து 5 ஏரிகளுக்கு மற்றும் 1200 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பயன்பெறும் அந்த வகையில் வெளி வாங்கி மதகு வழியாக 200 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
ஏரிகள் நிறைந்த மாவட்டமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியாக உள்ள வைரமேகம் தடாகம் என்று அழைக்கப்படும் உத்திரமேரூர் ஏரியில் முழு கொள்ளளவு என்பது 20 அடி தற்போது 18.5 ஆகவும் நீர் உள்ளது ஒரு டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. மேலும் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக அணைக்கட்டு பகுதியில் இருந்து ஏரிக்கு தொடர்ந்து நீர் வரத்து காரணமாக மூன்று கலங்கள் வழியாக 500 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்பொழுது கூடுதலாக வெளிவாங்கி மதகு வழியாக 200 கன அடி திறக்கப்பட்டுள்ளது.
அரசாணி மங்கலம், களியாம்பூண்டி, அத்தி, துலியூர் உள்ளிட்ட 9 ஏரிகள் இதன் மூலம் நிரம்பும் கிட்டத்தட்ட 8000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
மேலும் இன்று உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் வெளிவாங்கி மதகு வழியாக 200 கன அடி நீரை மலர் தூவி திறந்து வைத்தனர்.
இந்நிலையில் கடந்த 2023 ஆண்டு இறுதியில் ரூ.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த ஆண்டு ஏரியை புனரமைக்கும் பணி நடைபெற்றது, இதனால் வெள்ள தடுப்பு சுவர் 900 மீட்டர் உயரமும், 7500 மீட்டர் அகலத்தில் ஏரியின் கரை பலப்படுத்தும் பணி மற்றும் உத்திரமேரூர் அணைக்கட்டில் இருந்து 7 கிலோமீட்டர் தூரம் கால்வாய் தூர்வாரப்பட்டு, 13 ஷட்டர்கள் புனரமைக்கப்பட்டது காரணமாக தற்போது ஏரிகள் நீர் நிரம்பி வழிந்து வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.