மதுக்கூர் வட்டாரம் மதுரபாசாணிபுரம் கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
மதுக்கூர் வட்டாரம் மதுரபாசானிபுரம் கிராமத்தில் நூறு விவசாய தொழிலாளர்களுக்கு திருந்திய நெல் சாகுபடி குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி தஞ்சை மாவட்ட வேளாண் துணை இயக்குனர் சுஜாதா தலைமையில் மதுரபாசானிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையிலும் நடைபெற்றது.
பயிற்சியில் கலந்து கொண்ட விவசாய தொழிலாளர்களுக்கு திருந்திய நெல் சாகுபடி முறையில் நடவு செய்வதன் முக்கியத்துவம் அதன் மூலம் கிடைக்கும் அதிகமகசூல் மற்றும் பூச்சி நோய் கட்டுப்பாட்டில் திருந்திய நெல் சாகுபடியின் பங்கு பற்றி வேளாண் துணை இயக்குனர் சுஜாதா விளக்கி கூறினார்.
வேளாண் உதவி இயக்குனர் திலகவதி விவசாயிகள் மேற்கொள்ளும் பழைய முறையில் ஆன நடவுக்கும் வரிசை நடவுக்கும் திருந்திய நெல் சாகுபடி மூலம் நெல் நடவு செய்யும் போது கிடைக்கும் நன்மைகள் குறித்து வயல்வெளியில் களப்பயிற்சி அளித்தார்.
ஆத்மா திட்ட அலுவலர் சுகிதா மற்றும் ராஜு உயிர் உரம் மற்றும் சூடோமோனஸின் நன்மைகள் குறித்து செயல் விளக்கமாக செய்து காட்டினார். மதுரபாசணிபுரம் பெண் விவசாயிக்கு கலைஞர் திட்டத்தின் கீழ் வேளாண் இணை இயக்குனர் மானியத்தில் 16 லிட்டர் பவர் ஸ்பிரேயர் வழங்கினார்.
பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சூடோமோனஸ் உயிரியல் கட்டுப்பாட்டு காரணி 100 மதிப்பில் அனைவருக்கும் வேளாண் துணை இயக்குனர் சுஜாதா மற்றும் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி ஆகியோர் வழங்கினர். உதவி விதை அலுவலர் இளங்கோ நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார். வேளாண் உதவி இயக்குனர் திலகவதி பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.