Close
டிசம்பர் 12, 2024 9:42 காலை

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி லட்ச தீப பெருவிழா

பஞ்ச பூத ஸ்த்லங்களில் மண் தலமான புகழ்பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கார்த்திகை கடைசி வார திங்கட்கிழமை சோமவாரத்தையொட்டி லட்ச தீப பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரத்தை ஓட்டி அனைத்து சிவன் கோயில்களிலும் லட்ச தீப பெருவிழா நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இன்றைய தினம் கார்த்திகை மாத கடைசி சோமவார திங்கட்கிழமையையொட்டி பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கக்கூடிய புகழ்பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் இலட்ச தீப விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

உள் மற்றும் வெளி பிரகாரத்திலுள்ள 108 சிவ லிங்கங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு புதிய வஸ்த்திரங்கள் அணிவிக்கப்பட்டு உற்சவ மண்டபத்தில் ஏகாம்பரநாதர் மற்றும் ஏலவார்குழலி அம்மையாருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து வண்ண வண்ண மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.

இலட்ச தீப விழாவையொட்டி ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் கோவிலில் உள்ள நந்தி மண்டபம் மற்றும் கோவில் சுற்று பிரகாரங்களிலும், கோவில் முழுவதும் வண்ண வண்ண கோலமிட்டும், வண்ண பூக்கள் மற்றும் கோலங்களினால் சிவன் மற்றும் விநாயகர் திருவுருவங்கள் வரைந்து அதன் மீது விளக்கேற்றி வழிபட்டனர்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்  வெகு விமரிசையாக நடைபெற்ற லட்ச தீப பெருவிழா கோவில் வளாகம் முழுவதுமே தீப ஒளியில் மின்னியது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top