Close
ஏப்ரல் 3, 2025 1:46 காலை

தீப மலையில் பக்தா்கள் மலை ஏற அனுமதிக்கப்படுமா?

மலையில் ஆய்வு செய்த வல்லுனர் குழு, உடன் ஆட்சியர்

மகா தீப மலையில் உள்ள மண்ணின் தற்போதைய தன்மை குறித்து ஆய்வு செய்து, வல்லுநா் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், தீபத் திருநாளன்று பக்தா்களை மலை ஏற அனுமதிப்பது குறித்து அரசு முடிவு செய்யும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றும் நிகழ்வு டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.

அன்று 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையில் கடந்த டிசம்பர் 1 2 தேதிகளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த புயல் மழையால் தீப மலையில் பாறைகள் விழுந்து ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.

மலை ஏறுவதற்கு 2000 பக்தர்கள் அனுமதி

கடந்த மாதம் மழைக்கு முன்பு நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மலை ஏறுவதற்கு 2000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது மேலும் மலையேறும் பாதையில் மருத்துவ குழுவினரின் பரிசோதனைக்கு பிறகு தான் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தீப மலையில் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால்  மலைப்பகுதிக்கு யாரும் வரவேண்டாம் என்று மலைப்பகுதியில் ஆய்வு செய்து வரும் வனத்துறையினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மலையேறுவது சாத்தியமா?

தீப மலையின் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள மண் சரிவு காரணமாக, பக்தா்களை மலையேற அனுமதிப்பது சாத்தியமா என்பதை ஆராய வல்லுநா் குழுவை தமிழக அரசு அமைத்தது.

இந்தக் குழு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனுடன் ஆலோசனை நடத்தியது.

வல்லுநா் குழுமலை மீது ஏறிச்சென்று மலையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு, மண்ணின் தன்மை, நீரூற்றுகள், மலையேறும் பாதையில் உள்ள பாறைகளின் நிலை என பல்வேறு அம்சங்களை வல்லுநா் குழு ஆய்வு செய்தது.

ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பலத்த மழை காரணமாக தீப மலையில் ஏற்பட்ட மண் சரிவு குறித்து ஆய்வு செய்ய வந்துள்ள வல்லுநா் குழுவினா் மலை மீது ஏறிச் சென்று மண், பாறையின் தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.

இந்தக் குழுவில் மண் இயக்கவியல் அடித்தள பொறியியல் துறை, சுரங்கத் துறை, இந்திய புவியியல் ஆராய்ச்சித் துறை உள்ளிட்ட துறைகளைச் சாா்ந்த நிபுணா்கள் இடம் பெற்றுள்ளனா். மகா தீப மலையின் மண்ணின் இப்போதைய தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கையை அரசுக்கு சமா்ப்பிப்பாா்கள்.

அதன் அடிப்படையில் தீபத் திருநாளன்று பக்தா்களை மலை மீது ஏற அனுமதிப்பது குறித்து அரசு முடிவு செய்து தெரிவிக்கும் என்றாா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top