Close
ஏப்ரல் 3, 2025 4:22 காலை

கமிஷனுக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் பணம் செலுத்திய தொழிலதிபரிடம் ரூ. 30.37 லட்சம் மோசடி..!

ஆன்லைன் பணமோசடி

நாமக்கல்:

கமிஷனுக்கு ஆசைப்பட்டு, ஆன்லைன் மூலம் பணம் செலுத்திய தொழில் அதிபரிடம் ரூ. 30.37 லட்சம் மோசடி நடந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த முள்ளுக்குறிச்சி, மூங்கில்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (33), தொழில் அதிபர். இவரது செல்போனில் உள்ள டெலிகிராம் ஐ.டி.,க்கு, டாஸ்க் ஒன்று வந்து உள்ளது.

அதை ஓப்பன் செய்துள்ளார். அப்போது, அதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தினால், கமிஷனுடன் சேர்த்து கூடுதல் பணம் திரும்ப கிடைக்கும் என, தகவல் வந்து உள்ளது. அதை உண்மை என நம்பிய பாலமுருகன், முதலில், ரூ. 2,000, ரூ. 3,000 வீதம் செலுத்தியுள்ளார்.

அதன்படி, கூடுதலாக பணமும் திரும்பி வந்துள்ளது. தொடர்ந்து, குரூப் டாஸ்க்கில் ஆன்லைன் மூலம் தொடர்ந்து லட்சக்கணக்கில் பணம் செலுத்தி உள்ளார். அந்த பணம் திரும்ப வில்லை.

இதனால் ஏமாற்றம் அடைந்த பாலமுருகன், இது குறித்து நாமக்கல் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதில், அவர் ஆன்லைனில் 25 தவணையாக, ரூ. 30 லட்சத்து, 60 ஆயிரத்து 82 ரூபாய் செலுத்தியதாகவும், அதில், ரூ. 22,640 மட்டுமே திரும்ப கிடைத்துள்ளதகவும், அவருக்கு மீதம் வரவேண்டி தொகை ரூ. 30 லட்சத்து, 37 ஆயிரத்து 442 மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வ ழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top