வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்காசி, நெல்லை, ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில்
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்து வரும் மிதமான மழை மதியத்திற்கு பிறகு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதனை கருத்தில் கொண்டு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இன்று ஒருநாள் (12.12.2024) பள்ளிகள் விடுமுறை விடப்படுகிறது.
பிற வகுப்புகளைப் பொறுத்தவரை மழை சூழல் மற்றும் தேர்வுகளை பொறுத்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவெடுத்திட நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தென்காசி மாவட்டத்தில் மிதமான மழை பெய்கின்ற காரணத்தினால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை, வழக்கம் போல் இயங்கும் என தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தென்காசி மாவட்டத்தில் பயிலும் பள்ளி மாணவ மாணவிகள் மழையில் நனைந்தபடியே பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.