பட்டா மாறுதல் மற்றும் நில அளவை மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குனர் கூறினார்.
நாமக்கல் மாவட்டத்தில் நில அளவை பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்தார்.
நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் மதுசூதன ரெட்டி, நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது:
தமிழக அரசு இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் பட்டா மாறுதல் முறையை நடைமுறைப்படுத்தி உள்ளது. எனவே பொதுமக்கள் பயனடையும் வகையில் பட்டா மாறுதல் மனுக்கள் மீது, வி¬வாக உரியகாலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். புல எல்லை மனுக்களை உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும். பத்திரப்பதிவு அலுவலகம் மூலம் வரும் மனுக்கள் மீது நில சர்வேயர்கள் மற்றும் விஏஓக்கள் உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மனை பிரிவுகளாக பிரித்து வரும் மனுக்களை அரசுக்கு சொந்தமான வீதிகள், பூங்காக்கள் மற்ற இதர நிலங்களை பிரித்து, மீதம் உள்ள வீட்டுமனைகளை விரைந்து அளவீடு செய்து உத்திரவு பிறப்பிக்க வேண்டும்.
பொது சேவை மையம் மூலம் மனுக்கள் உள்ளீடு செய்யும் போது எவ்வித தவறுகளும் இல்லாமல் சரியான சர்வே நம்பர்கள் மற்றும் பத்திர ஆவண எண்களின் விபரங்களை உள்ளீடு செய்யவேண்டும். மேலும், அரசு நடைமுறைபடுத்தப்பட்ட ஃபஸ்ட் இன் ஃபஸ்ட் அவுட் என்ற முறையில் உட்பிரிவு மனுக்கள் மற்றும் பட்டா மாறுதல் மனுக்ளின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுக்களை உரிய காரணம் இல்லாமல் தள்ளுபடி செய்யக்கூடாது என்றார்.
டிஆர்ஓ சுமன், ஆர்டிஓக்கள் பார்தீபன், சுகந்தி, நில அளவைத்துறை உதவி இயக்குனர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.