Close
டிசம்பர் 18, 2024 8:11 மணி

செங்கம் அருகே புதிய கட்டிடங்கள் திறந்து வைத்த எம்எல்ஏ கிரி

புதிய கட்டிடங்கள் திறந்து வைத்த எம்எல்ஏ கிரி

செங்கம் அருகே சுமார் ரூபாய் 70 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கிழக்கு ஒன்றியம் அஸ்வநாக சூரனை கிராமத்தில் ரூபாய் 15 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து திருவண்ணாமலை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சிட்கோ அருகே புதிய பயணியர் நிழற்குடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பீமானந்தல் ஊராட்சியில் ரூபாய் 14 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடை மற்றும் 16 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடம், 30 லட்சம் மதிப்பீட்டில் ஆதி திராவிடர் நலத்துறை தொடக்கப் பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகள் கொண்ட ஸ்மார்ட் கிளாஸ் வசதியுடன் கூடிய புதிய கட்டிடம் உள்ளிட்டவைகளை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி திறந்து வைத்தார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கிரி, திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் புதிய தொழில்கள் துவங்குவது, மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவது, புதிய கட்டிடங்கள் உருவாக்குவது போன்ற திட்டங்கள் திமுக ஆட்சியில் தான் செயல்முறைப்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பெண்களுக்கு கட்டணம் இல்லாத பயணம், மக்களை தேடி மருத்துவ திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் போன்ற வரலாற்று போற்றக்கூடிய திட்டங்கள் திமுக அரசு கொண்டுவந்து. அதனை மக்களுக்கு நடைமுறைப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு வருகிறது என பேசினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், கூட்டுறவு சங்க பதிவாளர் மீனாட்சி சுந்தரம், அணி அமைப்பாளர்கள் ,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய செயலாளர், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ,அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top