திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள களம்பூர் பகுதியில் மிகப் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் இருந்து வந்தது. இந்த கோவிலில் வருடம் தோறும் லட்ச தீப விழா தீபத்தன்று மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நான்கு வழி சாலை விரிவாக்கத்தின் காரணமாக மாற்று இடத்தில் கோவில் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
இந்த பூமி பூஜையில் சிறப்பு விருந்தினராக மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் மற்றும் போளூர் தொகுதி பொறுப்பாளருமான எ.வ.வே.கம்பன் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.
சிறப்பு பூஜையொட்டி தசாவதாரம் மகா வேள்வி, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம்,, உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இவ்விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சேகரன், பாண்டுரங்கன், எதிரொலி மணியன், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி சீனிவாசன் ,தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், களம்பூர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அணி அமைப்பாளர்கள், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திமுக தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்றத் தொகுதி திமுக தேர்தல் பணி குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் போளூர் சட்டமன்றத் தொகுதி திமுக பொறுப்பாளரும் மாநில திமுக மருத்துவரணி துணைத் தலைவருமான எ.வ.வே.கம்பன் தலைமை தாங்கி சிறப்புரை நிகழ்த்தினார் .மேலும் திமுக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் ராஜசேகர் ,தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் ,மாவட்ட துணை செயலாளர் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி தலைவர்கள், அணி அமைப்பாளர்கள் , இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள், நகர ஒன்றிய பேரூர் செயலாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.