அலங்காநல்லூர் :
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளையொட்டி ஒன்றிய செயலாளர் வக்கீல் கோடீஸ்வரன் தலைமையில் பிரசித்தி பெற்ற முனியாண்டி சுவாமி திருக்கோயிலில் சிறப்பு பூஜை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
மேற்கு ஒன்றிய செயலாளர் ரகு, வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெய்பாண்டி, மாவட்ட இலக்கிய அணி நீதி, நகர் செயளாலர் ராஜபிரபு, முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவை தலைவர் செல்வம், ஒன்றிய இணை செயலாளர் சண்முகசுந்தரம், நிர்வாகிகள் வேல்முருகன், கல்லணை சந்திரசேகர், மோகன், பண்ணைகுடி அசோக், மகளிரணி ஈஸ்வரி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மணியஞ்சி ஊராட்சியில் கட்சியின் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஊராட்சி செயளாலர் ராஜா, மாதவன், ராஜேஷ், சுரேஷ், மகளிரணி ஆனந்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.