Close
டிசம்பர் 15, 2024 10:47 காலை

முன்னால் சென்ற லாரி மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்து : 2 பேர் உயிரிழப்பு..!

விபத்து- மாதிரி படம்

நாமக்கல் :
நாமக்கல் அருகே, முன்னால் சென்ற லாரி மீது சரக்கு ஆட்டோ மோதியதால் ஏற்பட்டு விபத்தில், ஆட்டோவில் வந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து பூக்கள் லோடு ஏற்றிக்கொண்டு, சரக்கு ஆட்டோ ஒன்று, திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. வாகனத்தை, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்த சிலுக்குவார்பட்டியை சேர்ந்த அதன் உரிமையாளரும் டிரைவருமான சக்திவேல் (28) என்பவர் ஓட்டிச் சென்றார்.

சரக்கு வாகனத்தில், அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (25), விக்னேஷ் (25) ஆகிய இருவரும் அமர்ந்து வந்தனர். இன்று அதிகாலை 2 மணிக்கு, சேலம் – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், பாப்பிநாயக்கன்பட்டி அருகே வந்தபோது, மழையில் ரோடு சரியாக தெரியாததால், முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி சரக்கு ஆட்டோ விபத்துக்குள்ளானது.

அதில் சரக்கு ஆட்டோ அப்பளம்போல் நொறுங்கியது. ஆட்டோவில் உட்கார்ந்து வந்த, நாகராஜ், விக்னேஷ் ஆகிய இருவரும் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த டிரைவர் சக்திவேல், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து, நல்லிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top