திருவண்ணாமலை மாவட்டம், பருவத மலைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமாவாசை, பிரதோஷம் பௌர்ணமி கார்த்திகை தீப நாட்களில் பருவதமலை மீது ஏறி சிவபெருமானை வணங்கி விட்டு செல்கின்றனர்.
இந்த மலைக்கு வெளி மாவட்டங்கள் வெளி மாநிலங்களில் இருந்து ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.
தற்போது இருவத்தாறு கிலோமீட்டர் தூரம் கொண்ட மலையை கிரிவலம் வருவதும் பிரபலமாகி வருகிறது.
இந்தப் பருவத மலையில் மலை ஏற ஓரளவுக்கு மட்டுமே பாதை வசதி உள்ளது. மலையின் மேல் நோக்கி செல்லும் பாதை செங்குத்தாக காணப்படும். கடப்பாரை நெட்டு பகுதிகளில் கம்பிகளையும் கடப்பாரைகளையும் பிடித்து தான் மேலே ஏறி செல்ல வேண்டும்.
மஹா தீபம்
கலசப்பாக்கம் அருகே 4,560 அடி உயர பர்வதமலை உச்சியில், கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டது. பர்வத மலையில் உள்ள மல்லிகா அர்ஜூனேஸ்வரர் பாலாம்பிகை திருக்கோவிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு, மலை உச்சியில் கார்த்திகை மகா தீபமும் ஏற்றப்பட்டது. செங்குத்தான பாதையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பக்தர்கள் நெய் தீபம் ஏந்தி அரோஹரா கோஷம் எழுப்பினர்.. முன்னதாக மகாதீபம் ஏற்றிடும் கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தீபம் ஏற்றப்பட்டது.
இந்நிகழ்வில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ,ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன், ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் ,அரசு அலுவலர்கள் ,விழா குழுவினர் ,கிராம பொதுமக்கள்,, பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று முழுவதும் பருவதமலை அடிவாரத்தில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.