Close
ஏப்ரல் 3, 2025 4:23 காலை

நாமக்கல்லில் சித்தமருந்து தின விழா : ராஜேஷ்குமார், எம்.பி., பங்கேற்பு..!

நாமக்கல் :

நாமக்கல்லில் நடைபெற்ற சித்த மருத்துவ தின விழாவை, ராஜ்யசபா எம்.பி., ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார்.

நாமக்கல் பழைய அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் சார்பில், 8-வது சித்த மருத்துவ தின விழா நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி., விழாவை துவக்கி வைத்துப் பேசியதாவது;

நாமக்கல் மாவட்டத்தில் சித்த மருத்துவத்தின் தந்தை அகத்திய முனிவரின் பிறந்த மாதத்தில் தேசிய சித்த மருத்துவ தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், இலவச சித்த மருத்துவ முகாமும், மூலிகை கண்காட்சியும் நடைபெறுகிறது. இதனை பொதுமக்கள் அனைவரும் முறையாக பயன்படுத்திக் கொண்டு தங்களின் உடல் ஆரோகியத்தை மேம்படுத்திட வேண்டும் என கூறினார்.

முன்னதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் சார்பில், அமைக்கப்பட்டிருந்த மூலிகைகள் மற்றும் அதன் சிறப்புகள் குறித்த, சித்த மருத்துவ கண்காட்சியை ராஜேஷ்குமார், எம்.பி. துவக்கி வைத்துப் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் நாமக்கல் மாநகர மேயம் கலாநிதி, துணை மேயர் பூபதி, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன், மாவட்ட சித்த மருத்துவ உதவி அலுவலர்கள் தமிழ்செல்வன், சர்வேஸ்பாபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top