Close
டிசம்பர் 18, 2024 3:46 மணி

திருவண்ணாமலை மக்கள் குறைதீர் கூட்டத்தில் 433 மனுக்கள் அளிப்பு

மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 433 மனுக்கள் வரப்பெற்றன.

திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 433 மனுக்கள் வரப்பெற்றன.

திருவண்ணாமலையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கூட்டத்தில் 433 பேர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், சாலை வசதி, வேளாண் பயிா்க் கடன், தாட்கோ கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 433 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மனு கொடுக்க வருவோரில் பெண்கள், வயதானோா், கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் மனுக்களை பெற்றுக்கொண்டார். மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்திற்கு குழந்தையுடன் வரும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் பால் வழங்கினார்

தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மனு அளிக்க வரும் பொது மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் விதத்தில் மனுக்களை அரசு அலுவலர்களைக் கொண்டு கட்டணம் இல்லாமல் எழுதிக் கொடுக்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதீபன் வருவாய்க் கோட்டாட்சியா் மந்தாகினி, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் செய்யது பாஷா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) உமாபதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சிவா மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஆரணி கோட்டாட்சியரிடம் குறைதீா் கூட்டத்தில் 56 மனுக்கள் அளிப்பு

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் வருவாய்க் கோட்ட அலுவலா் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

இதில் பட்டா கோரி, பட்டா மாற்றம், கணினி திருத்தம், ஆக்கிரமிப்பு, நிலஅளவை, யு.டி.ஆா். திருத்தம், வரைபட திருத்தம், மகளிா் உரிமைத்தொகை, ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, கல்வி உதவித் தொகை, கிராம உதவியாளா் மீது புகாா், இறப்புச் சான்று, வெள்ள நிவாரணம், குடும்ப நல உதவித் தொகை, சாலை சீரமைத்தல், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 56 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வருவாய் கோட்ட அலுவலா் உத்தரவிட்டாா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top