செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 52 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை சட்டமன்ற உறுப்பினர் கிரி வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் செங்கம் 44 ஊராட்சிகளில் உள்ள 52 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி எங்க வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தராஜு , தேவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி கலந்து கொண்டு பணி ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
அப்போது பேசிய கிரி எம்எல்ஏ, உலக வரலாற்றில் முதல்முறையாக குடிசையில் வாழும் மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தை அறிமுகப்படுத்தி அடித்தட்டு மக்கள் குடிசை வீடு இல்லாமல் வாழ வேண்டும் என உத்தரவை வழங்கியவர் கலைஞர் கருணாநிதி ஆவார்.
மேலும் விவசாயிகளின் பம்பு செட்டு மோட்டார் இலவசம் மின்சாரம் வழங்கியதும் திமுக ஆட்சியில் தான்.
குறிப்பாக மக்களை தேடி மருத்துவம் இல்லம் தேடி கல்வி மகளிர்க்கு கலைஞர் உரிமைத் தொகை கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் போன்ற வரலாறு போற்றக்கூடிய திட்டங்கள் அறிவித்து இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சர் ஆக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார், என கிரி எம் எல் ஏ பேசினார்.
மேலும் பணி ஆணை வழங்க அரசு அதிகாரிகளோ ஊராட்சி மன்ற தலைவரோ பணம் கேட்டால் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேரில் வந்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ கூறினாள் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்
திமுக கட்சி ஊராட்சி தலைவராக இருந்தால் கட்சியிலிருந்து நீக்கப்படுவர் எனவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயராணி குமார் ,ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ,ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய நிர்வாகிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.