Close
டிசம்பர் 18, 2024 12:56 மணி

நாமக்கல் நகரில் இன்றும் நாளையும் குடிநீர் சப்ளை இருக்காது: கமிஷனர்

நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி.

நாமக்கல் நகரில் இன்றும் நாளையும் குடிநீர் சப்ளை இருக்காது, என மாநராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாமக்கல் மாநகராட்சி, கமிஷனர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, பழைய டவுன் பகுதிக்கு மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து, குழாய்கள் மூலம் தினசரி குடிநீர் கொண்டுவரப்பட்டு, நாமக்கல் பரமத்தி ரோட்டில் உள்ள, தரைமட்ட நீர்தேக்க தொட்டியில் நிரப்பப்படுகிறது. அங்கிருந்து குழாய்கள் மூலம் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

நாளை 18ம் தேதி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, நாமக்கல் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அதே நேரத்தில் நகராட்சியின் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யும் பணி மற்றும் குடிநீர் மெயின் பைப்பலைன் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

அதனால் இன்று 17ம் தேதி மற்றும் நாளை 18ம் தேதி ஆகிய 2 நாட்கள், நாமக்கல் பழைய நகரப்பகுதியில் குடிநீர் விநியோகம் நடைபெறாது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top