நாமக்கல் :
வளையப்பட்டி பகுதியில் வரும் 19ம் தேதி வியாழக்கிழமை மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சீரான மின் விநியோகம் வழங்குவதற்காக, ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும், ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி துணை மின் நிலையத்தில் வரும் 19ம் தேதி வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.
இதனால் வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவ்வந்திப்பட்டி, குரும்பப்பட்டி, நல்லூர், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூர், ஒருவந்தூர், அரூர்மேடு உ.ள்ளிட்ட பகுதிகளில், வரும் 19ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார சப்ளை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.