Close
டிசம்பர் 18, 2024 7:07 காலை

தீப மலையில் சிக்கித் தவித்த ஆந்திரா பெண் பத்திரமாக மீட்ட வன காவலர்

மலையில் சிக்கித் தவித்த ஆந்திரா பெண்

திருவண்ணாமலையில் தடையை மீறி மகா தீப மலையில் ஏறி சென்று வழி தெரியாமல் சிக்கிக் கொண்ட ஆந்திர மாநில பெண்ணை, வனக்காப்பாளர் முதுகில் சுமந்து கீழே கொண்டு வந்தார்.

ஆந்திரா மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்தவர் அன்னபூர்ணா,இவர் திருவண்ணாமலையில் நடைபெற்ற தீபத் திருவிழாவை காண வந்துள்ளார்.

திருவண்ணாமலையில் சமீபத்தில் மண்சரிவு ஏற்பட்டுவிட்டது. வெவ்வேறு இடங்களில் 3 முறை மண் சரிவு ஏற்பட்டதில், 7 பேர் உயிரிழந்தனர். மலையில் பல இடங்களில் மண் அதிக ஈரப்பதத்துடன் இருப்பதால், மலை வழுவழுப்பாகவே காணப்பட்டது. அதனால், திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் பணியில் ஈடுபடுவோர் மட்டும் மலையில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அரசு அறிவித்திருந்தது. மகா தீப மலையில் பக்தர்கள் ஏறிச் செல்லும் வழிதடத்தில் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இப்படிப்பட்ட சூழலில், திருவண்ணாமலை மகாதீபத்தின்போது ஆந்திராவை சேர்ந்த அன்னபூரணி என்ற பெண், அத்துமீறி மலை மீது ஏறியுள்ளார்.

இவ்வளவு, கடுமையான கண்காணிப்புகளையும் மீறி ஒரு பெண் பக்தர் உட்பட 2 பேர் மகா தீப மலையில் கடந்த 15-ம் தேதி ஏறி சென்றுள்ளனர். இதில், அவர்கள் இருவரும் வழி தெரியாமல் தனித்தனியே பிரிந்துள்ளனர். இவர்களில் ஆண் நபர் மட்டும், மலையில் இருந்து கீழே இறங்கி உள்ளார். மேலும் அவர், மலையில் வழி தெரியாமல் பெண் பக்தர் ஒருவர் சிக்கிக் கொண்டுள்ளதாக வனத் துறையிடம் முறையிட்டுள்ளார்.

இதையடுத்து வனக்காப்பாளர் ராஜேஷ் மற்றும் தன்னார்வலர்கள், மகா தீப மலையில் கடந்த 16-ம் தேதி காலை ஏறி சென்றனர். ஆண் நபர் தெரிவித்த வழி தடங்களில் சுமார் 5 கி.மீ., தொலைவு சுற்றி வந்தனர். இருப்பினும், அந்த பெண் கிடைக்கவில்லை. பின்னர், 6 மணி நேர போராட்டத்துக்கு பிறகு, மகா தீப மலையின் தெற்கு திசையில் 2 கி.மீ., தொலைவில் (கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி முன்பு உள்ள பூங்கா வழித்தடம்) அப்பெண் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை அணுகியபோது, உடல் சோர்ந்து இருப்பது தெரியவந்தது. இதனால், அப்பெண்ணை முதுகில் சுமந்து, மலையில் இருந்து வனக்காப்பாளர் இரவு 8 மணியளவில் கீழே கொண்டு வந்தார். மலையில் இரவு முழுவதும் தனியாக இருந்ததாலும், குடிநீர் மற்றும் உணவு இல்லாமல் இருந்ததாலும் பெண்ணின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அப்பெண்ணின் பெயர் வெங்கடேஸ்வர ராவ் மனைவி அண்ணபூர்ணா என்பதும், ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் வசிப்பவர் என்பதும் தெரியவந்தது.

வழியெல்லாம் கற்களும், பாறைகளும், செடி கொடிகளும் நிறைந்திருந்தன. அவைகளை ஒருகையால் விலக்கி விட்டபடியே, அன்னபூரணியை வனக்காப்பாளர் ராஜேஷ் முதுகில் சுமந்து வந்தார். வனக்காப்பாளரின் இந்த செயலை கண்டு, அங்கிருந்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

ஆந்திர பெண்ணை முதுகில் சுமந்து வந்த வனக்காப்பாளர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top