நாமக்கல்:
அரசு கேபிள் டிவிக்காக, நாமக்கல் மாவட்டத்திற்கு, முதல் கட்டமாக உலகத்தரம் வாய்ந்த 10 ஆயிரம் எச்.டி. செட்டாப் பஸ்கள் 20ம் தேதி வருகை தருகிறது.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், டிவி ஒளிபரப்பிற்காக, தமிழகம் முழுவதும் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட செட்டாப் பாக்ஸ்களை வழங்கி உள்ளது. இந்நிலையில், கடந்த சட்டசபை கூட்டத்தொடரில், தமிழக அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு, நவீன உலகத் தரம் வாய்ந்த எச்.டி செட்டாப் பாக்ஸ்கள் விரைவில் வழங்கபடும் என, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன் அறிவித்திருந்தார்.
உலகத் தரம் வாய்ந்த எச்.டி. வகை செட்டாப் பாக்ஸ்கள் பெற தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம், 2 மாதமாக அதற்கான பணியில் ஈடுபட்டது. அதற்கான டென்டர் இறுதி செய்யப்பட்டு, தற்போது, எச்.டி. செட்டாப் பாக்ஸ்கள் கொள்முதல் செய்யப்பட்டு, மண்டலம் வாரியாக அனுப்பப்பட்டு வருகிறது.
சென்னையில் இருந்து, அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள தமிழக அரசு கேபிள் டிவி நிறுவன அலுவலகம் மூலம், தமிழக அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் இரவு பகலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாமக்கல்லில் தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் தாசில்தார் அலுவலகத்தில் இயங்கி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பதிவு செய்யபட்ட, 500-க்கும் மேற்பட்ட அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட செட்டாப் பாக்ஸ்கள் ஏற்கனவே வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது, உலகத்தரம் வாய்ந்த எச்.டி. செட்டாப் பாக்ஸ்கள் இந்த வார இறுதிக்குள் நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளது. நாமக்கல் மாவட்டத்திற்கு, முதல் கட்டமாக, 10,000 உலகத் தரம் வாய்ந்த எச்.டி. செட்டாப் பாக்ஸ்கள் வழங்கும் பணி நாளை 20ம் தேதி துவங்க உள்ளது.
புதியதாக வரும் எச்.டி. செட்டாப் பாக்ஸ்கள் பாதுகாப்புடன் வைக்க, நாமக்கல் மாவட்ட கேபிள் டிவி தனி தாசில்தார் ராஜா, மாவட்ட தொழில் நுட்ப அலுவலர் சதீஷ்குமார், உதவி தொழில் நுட்ப அலுவலர் வரதராஜ் ஆகியோர் விரிவான ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
இதற்காக, நாமக்கல் மாவட்ட அரசு கேபிள் டிவி நிறுவன அலுவலகம் அருகில், 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட அறை தயார் செய்யப்பட்டுள்ளது. புதியதாக வரும் எச்.டி. செட்டாப் பாக்ஸ் உடன் அடாப்டர், எச்டிஎம்ஏ கேபிள் மற்றும் ரிமோட் ஆகியவைக் கொண்ட பேக்கேஜூடன் வர உள்ளது.
தமிழக முதல்வர் புதிய எச்.டி. பாக்ஸை அறிமுகம் செய்து துவக்கி வைத்த பின், நாமக்கல் மாவட்டத்தில் கேபிள் ஆப்பரேட்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும். இதனால், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள், பொதுமக்கள் ஆகியோர் புதிய எச்.டி. செட்டாப் பாக்ஸ்பாக்ஸை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.