நாமக்கல் :
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் 102வது பிறந்த நாள் விழா நாளை நடைபெறுகிறது.
இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் 102வது பிறந்த நாள் விழா நாளை 19ம் தேதி, வியாழக்கிழமை, கிழக்கு மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது. நாமக்கல்லில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நாளை 19ம் தேதி காலை 10 மணிக்கு, மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமையில் பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள் விழா நடைபெறுகிறது.
எம்எல்ஏ ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயம் பூபதி, நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நிகழ்ச்சியில், பேராசிரியரின் உருப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட உள்ளது.
மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியம், நகரம், டவுன் பஞ்சாயத்துக்களில் பேராசிரியர் அன்பழகன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, திமுக மூத்த முன்னோடிகளுக்கும், பொதுமக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும்.
நிகழ்ச்சிகளில் அந்தந்த ஒன்றிய, நகர, பேரூராட்சி பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.