Close
டிசம்பர் 19, 2024 10:01 காலை

தண்டராம்பட்டில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் : எம்எல்ஏ திறப்பு..!

தொழிற்பயிற்சி நிலையத்தை திறந்து வைத்த டிஆர்ஓ மற்றும் எம்எல்ஏ

தண்டராம்பட்டில் அமைக்கப்பட்டுள்ள அரசு புதிய தொழில் பயிற்சி நிலையத்தை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு பகுதியில் புதியதாக அரசு தொழிற்பயிற்சி நிலைய திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் பன்னீர்செல்வம் ,துணைத்தலைவர் பொன் தனுசு, ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் தனசேகரன் அனைவரையும் வரவேற்றார்.
இவ்விழாவில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொழில் பயிற்சி நிலையத்தை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
தொடர்ந்து மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கி பேசியதாவது;

திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகவும் பின்தங்கிய தொகுதியாக செங்கம் சட்டமன்ற தொகுதி உள்ளது . செங்கம் சட்டமன்ற தொகுதிக்கு ஒரு அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும் என சட்டசபையில் கோரிக்கை வைத்தேன். கோரிக்கையை ஏற்று செங்கம் சட்டம் மன்ற தொகுதிக்கு உட்பட்ட தண்டராம்பட்டு பகுதியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன் அடிப்படையில் தற்போது தண்டராம்பட்டு பகுதியில் புதியதாக அரசு தொழில் பயிற்சி நிலையத்தை திறந்து வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தொழிற்பயிற்சி நிலையம் வருவதற்கு உறுதுணையாக இருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு ,தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் உள்ளிட்டோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கிரி,எம் எல் ஏ பேசினார்.

முன்னதாக தண்டராம்பட்டு அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் பத்து மாணவர்களுக்கு சேர்க்கை காண ஆணையினை கிரி எம் எல் ஏ வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தாசில்தார் மோகன ராமன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ,ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் வேலு, மாவட்ட கவுன்சிலர்கள், மாவட்ட பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,திமுக நிர்வாகிகள், அரசு தொழில் பயிற்சி நிலைய பயிற்சியாளர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள்,  கிராம நிர்வாக அலுவலர்கள் ,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top