Close
டிசம்பர் 19, 2024 1:36 மணி

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நில அளவையர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம்

நில அளவையர்களின் போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவையர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நில அளவையர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் பணியாற்றும் வருவாய் துறையில் அரசு நில அளவைர்கள் கடும் பணிச்சுமையால் பாதிக்கப்படும் கள பணியாளர்களின் அனைத்து விதமான பணிகளையும் கணக்கில் கொண்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

மனித திறனுக்கு ஏற்ற குறியீடுகளை வரையறுக்க வேண்டும்.

கூடுதல் இயக்குனருக்கு உள்ள அனைத்து அதிகாரத்தையும், இயக்குனருக்கு மாற்றுவதை நிறுத்தி, பழைய நடைமுறை தொடர வேண்டும்.

சிறப்பு திட்டங்கள் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு கால நிர்ணயம் வழங்காமல், ஊழியர்கள் மீது பெரும் பணிசுமையை சுமத்துவதாலும், நியாயமான தள்ளுபடிகளுக்கு ஆய்வு என்ற பெயரில் ஊழியர்களை கடுமையாக நடத்துவதை கைவிட வேண்டும்

போன்ற 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இதனால் அலுவலகத்தில் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனை அடுத்து கட்ட போராட்டம் 2025 ஜன., 22 முதல், 23 வரை, 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top