Close
டிசம்பர் 19, 2024 2:13 மணி

திருவள்ளூரில் கொட்டும் மழையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

சத்துணவு மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் கொட்டும் மழையில் குடைகளை பிடித்துக்கொண்டு மாவட்ட தலைவர் ஏ.சிவா, தலைமையில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக முழுவதும் சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும்,
சமூக நீதி கொள்கைகள் மற்றும் பெண்கள் நலனுக்கு எதிராக ரூ. 3000 தொகுப்பு ஊதியத்தில் பணி நியமனம செய்ய முடிவு செய்துள்ள தமிழக அரசின் நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது.
தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படுவதை அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாநிலத் தலைவர் சந்திரசேகரன், மாநில துணை பொது செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் சுலோச்சனா, மாவட்ட துணை தலைவர் வெங்கடேசன், மாவட்ட துணைத் தலைவர்கள் கருணாகரன், வளர்மதி, மற்றும் மாவட்ட பொருளாளர் குணசுந்தரி, மாவட்ட இணை செயலாளர்கள் தேன்மொழி, வனிதா, சதீஷ்குமார், தினேஷ் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மலர் கொடி, மாவட்ட தலைவர் பி .சி. ராஜேந்திரன், சைலஸ்ரீ லூர்துசாமி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top