Close
டிசம்பர் 19, 2024 4:54 மணி

கொரோனா காலத்தில் பெறப்பட்ட அட்வான்ஸ் தொகை தள்ளுபடி: நெசவாளர்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம் பட்டு என்பது உலக புகழ்பெற்றது. உள்நாடுகள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், காஞ்சிபுரம் பட்டு வாங்கி சென்றால் மட்டுமே திருப்தி அடைவார்கள்.

பட்டுப் புடவையில் பல்வேறு டிசைன்கள் வந்தாலும், கைத்தறி நெசவாளர்களுடைய கைவண்ணத்தில் மாம்பழம் டிசைன் பட்டுச்சேலைக்கும், மயில் டிசைன் பட்டு சேலைக்கும் இன்றைக்கும் மவுசு குறையவில்லை.

காஞ்சிபுரம் பட்டு என்றாலே பெண்களின் மனம் கவர்ந்தது. பட்டு வாங்குபவர்களை, திருமணத்திற்கு பட்டு வாங்குபவர்கள், சில சுப நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பட்டு வாங்குபவர்கள், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பட்டு எடுப்பவர்கள் என 3 மூன்று வகையாக பிரிக்கலாம்.

இன்றளவில் பல தனியார் பட்டு கடைகள் வந்தாலும், அவர்களுக்கு இணையாக அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் அண்ணாவின் பெயரைத் தாங்கி காஞ்சிபுரத்தில் 35 வருடங்களாக செயல்பட்டு வரும் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் முருகன் பட்டு கூட்டுறவு சங்கம் ஆகிய 2 சங்கங்களும் முதன்மையான லாபத்தில் இயங்கி வரும் பட்டு கூட்டுறவு சங்கங்களாகும்.

மேலும் காஞ்சிபுரத்தில் மட்டும் 22 பட்டு கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இப்பட்டு கூட்டுறவு சங்கங்களை நம்பி சுமார் 50 ஆயிரம் நெசவாளர்கள் குடும்பம் நடத்தி வருகின்றனர்.

குடும்பமாக பட்டுத் தொழில் செய்து வந்த நெசவாளர்கள் இன்று தங்க விலையேற்றம், ஆன்லைன் வர்த்தகம், கோரா&ஜரிகை விலையேற்றம் போன்ற காரணங்களால் பல நெசவாளர்கள் வாட்ச்மேன் வேலைக்கும், கூலி தொழிலுக்கும் பல தனியார் கம்பெனிகளுக்கும் சென்றுவிட்டனர்.

நெசவாளர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகிய இந்நிலையில் மீதமுள்ள நெசவாளர்களையும், பட்டு தொழிலையும் காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இன்றும் நெசவுத் தொழிலை செய்துவரும் நெசவாளர்கள் வாழ்வாதாரத்தில் பெரும் இடி கொரோனா காலத்தில் விழுந்தது.

அப்போது அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள 2500 உறுப்பினர்களில் சுமார் 975 உறுப்பினர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக ரூபாய் 4000 கொரோனா கால அட்வான்ஸ் கடனாக அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் பெற்றனர்.

ஆனால் அதனை திருப்பி செலுத்துவதில் பெரும் சிரத்தை அடைந்து வந்த நிலையில், இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் , எழிலரசன் மற்றும் மாநகர செயலாளர் தமிழ்செல்வன் உள்ளிட்டோரிடம் நெசவாளர்கள் அக்கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனை ஏற்று இவர்களின் பரிந்துரையின் பேரில் தமிழக கைத்தறி துணி நூல் அமைச்சர் காந்தி காஞ்சிபுரம் வருகை புரிந்த போது அண்ணா பட்டு கூட்டுறவு சங்க நெசவாளர்கள் மனு அளித்தனர்.

அதனை ஏற்ற அமைச்சர் அதை பரிந்துரை செய்து துறை ரீதியாக அதனை ஆய்வு மேற்கொண்டு கொரோனா காலகட்டத்தில் ரூபாய் 4000 கடனாக பெற்ற 975 நெசவாளர்களுக்கு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதன் மூலம் ரூபாய் 38.50 லட்சம் ரூபாய் தள்ளுபடி பெற்றுள்ளதும், இது பட்டு கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களின் நலநிதியின் கீழ் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top