Close
ஏப்ரல் 1, 2025 11:56 மணி

திருவண்ணாமலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..!

திருவண்ணாமலையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அமைச்சர் அமித்ஷா , டாக்டர் அம்பேத்கர் அவர்களை விமர்சனம் செய்ததை கண்டித்து காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தமிழகம் மட்டும் இன்றி மத்தியிலும் அமித்ஷா அவர்களின் உருவ பொம்மைகளை எரித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில்  திருவண்ணாமலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, அவர்களின் தலைமையில் சட்டமாமேதை அம்பேத்கர் உருவச்சிலையினை கழுவியும், பின்னர் கண்டன முழக்கம் எழுப்பியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி, மாநில பொறியாளரணி செயலாளர் எஸ்.கே.பி. கருணாநிதி, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன், திருவண்ணாமலை திமுக நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், மாவட்ட கழக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள்  பலர் உடன் இருந்தனர்.

செங்கம்

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி தலைமையில் செங்கத்தில் உள்ள சட்டமாமேதை அம்பேத்கர் சிலையினை கழுவியும், பின்னர் கண்டன முழக்கம் எழுப்பியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில், நகர செயலாளர் அன்பழகன், ஒன்றிய கழக செயலாளர்கள் செந்தில்குமார், ஏழுமலை, மனோகரன், பேரூராட்சி தலைவர் சாதிக்பாட்ஷா, பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர்கள் செந்தில்குமார், இராமஜெயம் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

வேட்டவலம்

வேட்டவலம் திமுக சார்பில் மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்களை கண்டித்து துணை சபாநாயகர் பிச்சாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் ராஜேந்திரன் நகர செயலாளர் முருகன் கீழ்பெண்ணாத்தூர் அன்பு மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புரட்சியாளர் சட்ட மேதை அம்பேத்கரை அவமதித்த மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை கண்டித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட விசிக செயலாளர் நியூட்டன் அவர்களின் தலைமையில் திருவண்ணாமலையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் விசிக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top