கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 50 பயனாளிகளுக்கு வீடு கட்டும் அரசு ஆணையை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் 50 பயனாளிகளுக்கு வீடு கட்டும் அரசு ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ஒன்றிய குழு பெருந்தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார் .ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பத் ,நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர் .துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பங்கேற்று புதுப்பாளையம் ஒன்றியத்தில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் 50 பயனாளிகளுக்கு புதிய அரசு வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான அரசு ஆணையை வழங்கி பேசியதாவது;
நான் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய வந்தபோது அப்பகுதியில் உள்ள மக்கள் எங்களுக்கு அரசு வழங்கும் வீடு வழங்க வேண்டும் என என்னிடம் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையின் அடிப்படையில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்திலும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திலும் கலசப்பாக்கம் தொகுதிக்கு கொஞ்சம் அதிகமாகவே வீடு வழங்க வேண்டும் என நமது பொதுப்பணித்துறை அமைச்சர் வேலுவிடம் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவர்களிடமும் கோரிக்கை வைத்தேன்.
அப்பொழுது கலசப்பாக்கம் தொகுதி மிகவும் பின்தங்கிய தொகுதியாக இருந்து வந்தது . கலசப்பாக்கம் தொகுதியை வளர்ச்சியான தொகுதியாக மாற்றுவதற்காகவும் அதே போல் இப்பகுதியில் ஆறு மற்றும் ஏரி மலை போன்ற இயற்கை சூழல் அதிகமாக உள்ள பகுதி. இந்த பகுதியில் புயல் மற்றும் மழை வெள்ளம் போன்ற பேராபத்துக்கள் வந்தால் முதலில் கலசப்பாக்கம் தொகுதியை தான் தாக்கி வருகிறது.
அதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் பின் தங்கிய தொகுதி மக்களாக இருந்து வருகின்றனர். அதனால் கலசப்பாக்கம் தொகுதியை வளர்ச்சியான தொகுதியாக மாற்றுவதற்காகவும் மக்கள் அனைவருக்கும் கலைஞரின் கனவு இல்லத்தில் வீடு வழங்க வேண்டும்,
அதேபோல் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் வீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து நான் தொகுதி மக்களுக்காக பெற்றுக் கொடுத்திருக்கிறேன். அதில் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 50 பைனாளிகளுக்கு புதிய அரசு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டுவதற்கு உண்டான பணி ஆணையை இன்று வழங்கி உள்ளோம்.
இதன் மூலம் ஆணையைப் பெற்று விரைவில் வீட்டின் பணிகளை தொடங்கி மூன்று மாதத்திற்குள் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சரவணன் எம்எல்ஏ பேசினார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு ஒப்பந்தக்காரர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,ஒன்றிய செயலாளர், அரசு அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.