Close
டிசம்பர் 27, 2024 10:46 காலை

நில அளவை அலுவலா்கள் ஆர்ப்பாட்டம்..!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நில அளவை அலுவலர்கள்

பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பின் திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகிகள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு, ஒன்றிப்பின் மாவட்டத் தலைவா் சையத் ஜலால் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் சரவணன் வரவேற்றாா்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நில அளவை அலுவலர்கள்

மாநிலத் தலைவா் ஜெ.இராஜா, மாவட்டச் செயலா் பி.சென்னையன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

போராட்டத்தில், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சார்பில் களப்பணியாளர்கள் செய்யும் அனைத்து விதமான பணிகளையும் கணக்கில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளவும் ,சிறப்புத் திட்டங்கள் மூலம் பெறப்படும் மனுக்கள் மற்றும் பணிகளுக்கு கால நிா்ணயம் வழங்காமல் ஊழியா்கள் மீது பெரும் பணிச்சுமையை சுமத்துவதை தவிா்க்க வேண்டும்.

நியாயமான தள்ளுபடிகளுக்குகூட ஆய்வு என்ற பெயரில் ஊழியா்களை கடுமையாக நடத்துவதை கைவிட வேண்டும் , என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் வியாழக்கிழமை ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் நிா்வாகிகள் பரிதிமாற் கலைஞன், ரகுபதி, முரளி, கண்ணன்,தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய நிர்வாகிகள், நில அளவை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top