Close
டிசம்பர் 23, 2024 5:13 மணி

நாமகிரிப்பேட்டையில் உழவர் நல ஆலோசகர்கள் கலந்தாய்வு கூட்டம்..!

நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், உழவர் நல ஆலோசகர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், பஞ்சாயத்து அளவிலான உழவர் நல ஆலோசகர்கள் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் 2 உழவர் நல ஆலோசகர்கள் தேர்வு செய்யப்பட்டு, தங்கள் கிராமத்தில் விளையும் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உள்ள சேமிப்பு கிடங்குகள், குளிர்பதனக் கிடங்குகள், பரிவர்த்தனைக் கூடங்கள், உலர்களங்கள் மற்றும் எடை மேடை ஆகிய உட்கட்டமைப்பு வசதிகளை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் செயல்படுத்தப்படும், மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம், பண்ணைகளில் வர்த்தகம், பொருளீட்டுக்கடன் வசதி, உழவர் நலத்திட்டம் மற்றும் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை மூலம் செயல்படுத்தப்படும் உழவர் சந்தை, வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், ஏற்றுமதி ஆலோசனை மையம் ஆகிய திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கூட்டத்தில், வேளாண்மை அலுவலர், ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர், உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் புதுச்சத்திரம், சேந்தமங்கலம், நாமகிரிப்பேடை, இராசிபுரம், வெண்ணந்தூர் வட்டார் உழவர் நல ஆலோசகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இத்தகவலை நாமக்கல் வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) டாக்டர் நாசர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top