Close
டிசம்பர் 23, 2024 1:48 மணி

நாமக்கல்லில் 27ம் தேதி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..!

கோப்பு படம்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து, கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில், நடப்பு டிசம்பர் மாதத்திற்கான, மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வருகிற 27ம் தேதி காலை 10.30 மணிக்கு, மாவட்ட கலெக்டர் ஆபீசில் நடைபெறுகிறது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, விவசாயிகளின் குறைகளை கேட்டறிய உள்ளார்.

இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு, வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத்திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top