நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்களுக்காக, நவீன தொழில்நுட்பத்துன் கூடிய 8,000 செட் டாப் பாஸ்கள் சென்னையில் இருந்து நாமக்கல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு அதிநவீன தொழில் நுட்ப வசதியுடன் எச்டி செட் டாப் பாக்ஸ் வழங்க வேண்டும் என, கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இக்கோரிக்கையை ஏற்று, தமிழகம் முழுவதும் உள்ள கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு அரசு கேபிள் நிறுவனம் சார்பில், புதிய எச்டி செட் டாப் பாக்ஸ் வழங்கும் பணி துவங்கி உள்ளது.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு வழங்குவதற்காக அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இருந்து, முதல் கட்டமாக, 8,000 எச்டி செட் டாப் பாக்ஸ்கள் வந்துள்ளது.
அவை, நாமக்கல் – திருச்சி ரோட்டில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த எச்டி செட் டாப் பாக்ஸ்களை, அரசு கேபிள் டிவி துணை மேலாளரும், தனி தாசில்தாருமான ராஜா, கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு வழங்கும் பணியை நேற்று துவக்கி வைத்தார்.
அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் ஆர்வத்துடன் ஆன்லைனில், ரூ. 500 வீதம் செலுத்தி, புதிய செட் டாப் பாக்ஸ்களை வாங்கி செல்கின்றனர். குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்களை கொண்ட இந்த செட் டாப் பாக்ஸ், படிப்படியாக அனைத்து அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
மாவட்ட தொழில் நுட்ப அலுவலர் சதீஷ்குமார், தொழில் நுட்ப உதவி அலுவலர்கள் வரதராஜ், சுரேஷ்குமார் ஆகியோர், புதிய செட் டாப் பாக்ஸ் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.