Close
டிசம்பர் 25, 2024 12:58 காலை

மத்திய அமைச்சரை பதவி நீக்கம் செய்யக் கோரி நாமக்கல் கலெக்டரிடம் காங்கிரசார் மனு..!

அம்பேத்காரை விமர்சனம் செய்த, மத்திய அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்யக்கோரி, நாமக்கல் கலெக்டரின் பி.ஏவிடம், கிழக்கு மாவட்ட காங்கிரசார் மனு அளித்தனர்.

நாமக்கல் :

அம்பேத்கார் குறித்து விமர்சனம் செய்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்யக்கோரி, நாமக்கல் கலெக்டர் ஆபீசில் காங்கிரசார் மனு அளித்தனர்.

பார்லிமென்ட்டில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் குறித்து விமர்சனம் செய்ததைக் கண்டித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், நாமக்கல் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் காந்தி அடிகள் மற்றும் அம்பேத்கார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திப்பட்டது. தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் காங்கிரஸ் நிர்வாகிகள், நாமக்கல் கலெக்டர் அலுலகத்திற்கு சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வீரப்பன், மாநகர காங்கிரஸ் தலைவர் மோகன், வட்டாரத்தலைவர்கள் தங்கராஜ், இளங்கோ உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top