Close
டிசம்பர் 26, 2024 6:30 மணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா

கிறிஸ்மஸ் விழாவில் வாழ்த்து அட்டைகள் மற்றும் இனிப்புகளை வழங்கிய துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேவாலயங்களில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில், ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் உள்ள உலக மாதா பேராலயத்தில் பங்குத்தந்தை பேராயர் சாமுவேல் கென்னடி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

பெரியார் சிலை அருகே உள்ள ஏஎல்சி தேவாலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு அவர்கள் சார்பில் கிறிஸ்துமஸ் விழாவில் கார்மேல் சர்ச் போதகர் சாமுவேல் அவர்களிடம் இனிப்புடன் கூடிய சாக்லேட் மற்றும் கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டையை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, திமுக நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், தொமுச அமைப்பாளர் ஆறுமுகம், சிறுபான்மை நல உரிமை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் ராயல் தியாகு, ஏஎல்சி சர்ச் செயலாளர் போதகர் சாமுவேல், திமுக சிறுபான்மையினர் பிரிவு நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள் வழங்கினார்கள்.

மேலும் திருவண்ணாமலை சாரோனில் உள்ள தேவாலயம், தேனிமலை பகுதியில் உள்ள குழந்தை இயேசு தேவாலயங்களிலும் கிறிஸ்மஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தேவாலயங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் இயேசு பிறப்பை விளக்கும் வகையில் தத்துவ ரூபமாக குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

ஆரணி

ஆரணி பழைய ஆற்றுப்பாலம் அருகில் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

அதிகாலை சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. கேக்குகள் வெட்டி ஒருவருக்கு ஒருவர் கேக் ஊட்டி மகிழ்ந்தனர். தேவாலயத்தில் இயேசு பிறப்பு குறித்த குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

வேட்டவலம்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலயத்தில்  கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி பங்குத்தந்தை ஆரோக்கியசாமி தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. தொடர்ந்து இயேசு கிறிஸ்து பிறந்த நற்செய்தியை அறிவித்தார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

வந்தவாசி 

வந்தவாசி காஞ்சிபுரம் சாலையில் உள்ள தூய இருதய ஆலயத்தில் பங்குத்தந்தை பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பல்வேறு கிறிஸ்துவ பாடல்களை பாடிக்கொண்டு திருப்பலியில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் இயேசுநாதர் கிறிஸ்து பிறந்த குழந்தை இயேசுவை கிறிஸ்துவ குடிலில் வைக்கப்பட்டது. கூட்டு திருப்பலி நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

செங்கம்  திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் உள்ள சுக ஜீவ தேவ திருச்சபையில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் போதகர் கிருபாகரன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி கலந்து கொண்டு கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்புரை நிகழ்த்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top