காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி 75வது வைர விழா ஆண்டை ஒட்டி கல்லூரி மாணவர்கள் நடத்திய போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சென்னையினை தலைமை இடமாக கொண்டு பச்சையப்பன் கல்வி அறக்கட்டளை செயல்பட்டு கொண்டு வருகிறது. அதன் கீழ் காஞ்சிபுரத்தில் ஆடவர் மற்றும் மகளிர் கல்லூரிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என செயல்பட்டு வருகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியின் 75 வது வைர விழா ஆண்டு கொண்டாட்டம் கல்லூரி நிர்வாகம் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நாட்டு நல பணி திட்டம் தேசிய மாணவர் படை இளைஞர் செஞ்சிலுவை சங்கம், காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு காவல்துறை மற்றும் மாணவர்கள் இணைந்து இன்று மாபெரும் போதைப்பொருள் எதிர்ப்பு சங்கிலி பேரணி கல்லூரி முன்பு காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலையில் கல்லூரி முதல்வர் முருகக்க கூத்தன் தலைமையில் நடத்தினர்.
இதில் கலந்துகொண்ட மாணவர்கள் போதை பொருளைக் கட்டுப்படுத்த வேண்டும் அதனை தடை செய்ய வேண்டும் அதனை பயன்படுத்தி வாழ்க்கை இழந்து விட வேண்டாம் என வாசகங்கள் கொண்ட பதாகையில் ஏந்தி சாலையின் இருபுறமும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் கைகோர்த்து நின்று போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் சாலையில் சென்ற பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர், கல்லூரி பேராசிரியர்கள் முனைவர்கள் சிவபாலன், பழனிராஜ், அண்ணாதுரை, ஆனந்தன், ரவீந்தர், அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்