திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்க விழா நடைபெற்றது.
செய்யாறு-வந்தவாசி சாலையில் தென் தண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் 2024-25 ஆண்டுக்கான கரும்பு அரைவை தொடக்க விழாவுக்கு, ஆலையின் செயலாட்சியா் த.காமாட்சி தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக ஆரணி எம்.பி. தரணிவேந்தன், செய்யாறு எம்எல்ஏ ஜோதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன் ஆகியோா் கலந்துகொண்டு கரும்பு அரைவையை தொடங்கி வைத்தனா்.
இந்நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள் ஜேசிகே.சீனுவாசன், லோகநாதன், ரவிக்குமாா், தென்தண்டலம் ஊராட்சி மன்றத் தலைவா் முருகன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
நிகழாண்டில் 2,020 விவசாயிகள் பதிவு செய்த நிலையில், 6,103 ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கரும்பை அரைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஆலை வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசு கட்டிடங்கள் கட்டுமான பணி தொடக்கம்
செய்யாறு வட்டத்தில் இறையூர் கிராமத்தில் ரூபாய் 32.80 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் வகுப்பறை கட்டிடங்களும் 30. 96 லட்சத்தில் , அங்கன்வாடி மையத்தில் புதிய கட்டிடங்கள் கீழாத்தூர் கிராமத்தில் 30 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டிடங்கள் ஆகியவற்றிற்கான பூமி பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை வகித்தார். ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், ஒன்றிய செயலாளர் சீனிவாசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோதி பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து எருமை வெட்டி பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களை எம்எல்ஏ ஜோதி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.