Close
டிசம்பர் 28, 2024 6:51 மணி

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த விவசாயி : உறவினா்கள் மறியல்..!

சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்ததையடுத்து, திருவண்ணாமலையில் சடலத்துடன் உறவினா்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரத்தை அடுத்த ஈச்சங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் விநாயகமூா்த்தி . விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

விநாயகமூர்த்தியின் நிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மின் ஒயர் தாழ்வாக தொங்கியதாகவும் இது குறித்து மல்லவாடி துணை மின் நிலையத்தில் மின் ஒயர் சீரமைக்க புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

மின்வாரிய துறையினர் புகார் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்குடன் செயல்பட்டதாக தெரிவிக்கும் உறவினர்கள், வழக்கம்போல் விநாயகமூர்த்தி தன்னுடைய சொந்த விளை நிலத்தில் நேற்று காலை பூ பறிக்க சென்றார்.

அப்போது அறுந்து கிடந்த மின் ஒயரை அறியாமல் காலில் மிதித்ததால் உயிரிழந்ததாகவும் இதற்கு காரணமான மின்வாரியத் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி உயிரிழந்த விவசாயி விநாயகா மூர்த்தி உறவினர்கள் சடலத்துடன் திருவண்ணாமலை வேலூர் சாலையில் புது மல்லவாடி அருகில் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் மின்வாரிய துறை மூலம் குடும்பத்தில் உள்ளவர் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். தகவல் அறிந்த எஸ்பி சுதாகர், ஏ.எஸ்.பி சதீஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசருக்கும் மறியலில் ஈடுபட்டு இருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் மறியலில் ஈடுபட்டவர்களில் 18 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top