காஞ்சிபுரம் அண்ணா பொறியியல் கல்லூரி நுழைவு வாயிலில் ஸ்டேட் வங்கியின் சார்பில் புதிய ஏடிஎம் மையத்தை அவ்வங்கியின் துணைப் பொது மேலாளர் ஸ்ரீகாந்த் குடிவாடா திறந்து வைத்து பார்வையிட்டார்.
சென்னை பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே காரைப்பேட்டையில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இக்கல்லூரியின் நுழைவு வாயிலில் புதியதாக ஸ்டேட் வங்கியின் சார்பில் 20 ஆவது ஏடிஎம் மையம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் பாரத ஸ்டேட் வங்கியின் துணைப் பொதுமேலாளர் ஸ்ரீகாந்த் குடிவாடா தலைமை வகித்து ஏடிஎம் மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.
திறப்பு விழாவிற்கு பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் எஸ்.சுப்பையா,அண்ணா பொறியியல் கல்லூரியின் புல முதல்வர் பி.கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாரத ஸ்டேட் வங்கி காஞ்சிபுரம் கிளையின் மேலாளர் மணிகண்டன் வரவேற்று பேசினார். விழாவில் ஸ்டேட் வங்கி அதிகாரிகள், அண்ணா பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ,மாணவியர்கள் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஏடிஎம் மையம் அருகே கணபதி ஹோமம், தனலட்சுமி ஹோம பூஜைகளும் நடைபெற்றன.