Close
ஜனவரி 10, 2025 1:23 காலை

புதுமைப்பெண் திட்ட விரிவாக்க நிகழ்ச்சி: மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டை வழங்கிய அமைச்சர் காந்தி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 53 கல்லூரிகளை சேர்ந்த 248 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்ட விரிவாக்க நிகழ்வில் தமிழக கைத்தறி துறை அமைச்சர் காந்தி வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.

தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது அதில் குறிப்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் நான்கு வகையான திருமண நிதி உதவி திட்டம் , இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், அதனைத் தொடர்ந்து புதுமைப் பெண் திட்டம் என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் ரூபாய் தொகை புதுமை பெண் திட்ட விரிவாக்கம் மூலம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

இன்று தூத்துக்குடியில் முதல்வர் தொடங்கி வைத்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக 53 கல்லூரிகளை சார்ந்த 248 மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டை மற்றும் வெல்கம் கிட் ஆகியவற்றை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் காந்தி தனியார் பெண்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கி மாணவிகளுக்கு வாழ்த்துரை வழங்கினர்.

கடந்த 2022 முதல் தற்போது வரை புதுமை பெண் திட்டத்தின் கீழ் 7777 மாணவிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் 21 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது .
இதே போல் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் 8,599 மாணவர்களுக்கு தலா 1000 என 4 கோடியே 29 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஆட்சியர் கலைச்செல்வி, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் , எழிலரசன், மேயர் மகாலட்சுமி, சமூக நல அலுவலர் சியாமளா, கல்லூரி முதல்வர் கோமதி , கல்லூரி பேராசிரியைகள் , மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top