நாமக்கல் :
நாமக்கல் அருகே என்.புதுப்பட்டியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
தேசாய் அறக்கட்டளை, எஸ்.பி.எஸ் அறக்கட்டளை மற்றும் நாமக்கல் எம்.எம். ஹாஸ்பிட்டல் இணைந்த நடத்திய இலவச மருத்துவ முகாம், நாமக்கல் மாவட்டம் என்.புதுப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.
புதுப்பட்டி பஞ்சாயத்து தலைவர் கவிதா சுரேஷ் தலைமை வகித்தார். எம்.எம்.ஹாஸ்பிட்டல் நிர்வாக இயக்குனர் டாக்டர் சிவகுமார், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தார்.
இதில் 15 க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் முகாமில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகள் செய்து, மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்கள்.
இருதயம், எலும்பு மூட்டு தேய்மானம், மூளை நரம்பியல், மகளிர் மகப்பேறு போன்ற சிகிச்சைகள் வழங்கப்பட்டன. முகாமில், சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர். புதுப்பட்டியில் அமைந்துள்ள தொன்போஸ்கோ இல்லத்தினர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.